Thursday, December 18, 2008

அன்புள்ள‌ ச‌கோத‌ர‌ர்களூக்கு......

பெரும் ம‌திப்பிற்கும், ம‌ரியாதைக்குரிய‌ இஸ்லாமிய‌ அன்ப‌ர்க‌‌ளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வ‌ரஹ்...)

திரைக‌ட‌ல் ஓடி, திர‌விய‌ம் திர‌வியம் தேட‌, உற்றார் உறவின‌ர்க‌ளை பிறிந்து, க‌ட‌ல்க‌ட‌ந்து நாம் வாளூம் வெளிநாட்டில் ந‌ம்முடைய‌ ஒற்றுமையை வெளிப்ப‌டுத்த ப‌ஹ்ரைனில் இராஜ‌கிரி ப‌ண்ட‌ர‌வாடை இன்டெர்நேஸ்ன‌ல் அசொசியெசன் என்ற பெய‌ரில் கூட்டமைப்பு ஒன்றை க‌ட‌ந்த‌ மார்ச்'08 ல் ஏற்ப‌டுத்தி, ந‌ம‌து ஊரின் முன்ணேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், வ‌ச‌திகுறைவான‌ ந‌ம‌து ஊர் ச‌கோத‌ர‌ குடும்பங்க‌ளுக்கு ந‌ம்மால் இய‌ன்ற உத‌விக‌ளை செய்து வ‌ருகின்றோம். அல்ஹ‌ம்துலில்லா‌ஹ்....

மேலும் ந‌மது ச‌கோத‌ர‌ர்கள் ப‌ல‌ர் க‌ட‌ல்க‌ட‌ந்து வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தை அனைவ‌ரும் அறிந்த‌தே! வெளிநாட்டில் வாளும் அன்ப‌ர்க‌‌ளுக்காவும், அவ‌ர்க‌ளுடைய‌ க‌ருத்துக‌ள், எண்ணங்க‌ள் மற்றும் சிந்த‌னைகளை ப‌கிர்ந்துகொள்ள் இலகுவாக இருக்கும் என்ப‌தற்காக‌ இந்த‌ வ‌லைப‌திவு ஏற்ப‌டுத்தப்பட்டுள்ளது. இந்த‌ வ‌லைப‌திவில் அன்றட‌ நிக‌ழ்வுக‌ள் மற்றும் கூட்டமைப்பின் செய‌ல்பாடுக‌ள் ஆகிய‌வ‌ற்றை ப‌திவுசெய்ய‌ உள்ளோம்.

ந‌மது அன்ப‌ர்க‌‌ள் அனைவ‌ரும் தங்க‌ளுடைய‌ க‌ருத்துக‌ளை ப‌திவுசெய்து ப‌கிர்ந்துகொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்.

இப்ப‌டிக்கு,
இராஜ‌கிரி ப‌ண்ட‌ர‌வாடை இன்டெர்நேஸ்ன‌ல் அசொசியெசன்.

1 comment:

  1. தங்களுடைய மின்னஞ்சல் முகவரி கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் அனைவரும் தங்களுடைய சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

    அபு நிஹான்

    ReplyDelete

Heartly Welcome to all visitors!